Tuesday 25 September 2018

தாமிரபரணி புஷ்கர் நீராடும்

தாமிரபரணி புஷ்கர் நீராடும்  சில முக்கியமான
இடங்கள்

பாபநாசம்
அம்பாசமுத்திரம்
ஊர்க்காடு 1 (கீழ் படித்துறை)
ஊர்க்காடு 2 (மேல் படித்துறை)
கல்லிடைக்குறிச்சி
அத்தாள நல்லூர்
திருப்புடை மருதூர்
முக்கூடல்
தென் திருப்பவனம்
சேரன்மகாதேவி
காருகுறிச்சி
மேலச்செவல் & தேச மாணிக்கம்
கோபால சமுத்திரம்
சுத்தமல்லி
கோடகநல்லூர்
திருநெல்வேலி கொக்கிரகுளம்
திருநெல்வேலி சிந்துபூந்துறை
திருநெல்வேலி சி.என். கிராமம்
திருநெல்வேலி - அருள்மிகு ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவில் படித்துறை
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை குட்டந்துறை  (குஷ்டம் தீர்த்த) படித்துறை
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை மணிமூர்த்தீஸ்வரம்
திருநெல்வேலி - எட்டெழுத்து பெருமாள் கோவில் படித்துறை
சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில்
முறப்ப நாடு
நவ கைலாயம்
ஸ்ரீ வைகுண்டம்
ஆழ்வார் திருநகரி
தென்திருப்பேரை
ஏரல்
ஆத்தூர்
புன்னைக்காயல்

இத்தனை ஊர்களில் தாமிரபரணி செல்கிறது. எங்கு வேண்டுமானாலும் குளிக்கலாம்.

கொசுறு தகவல்: சில இடங்களுக்கு நீங்கள் சென்றால் நன்றாக இருக்கும். எத்தனையோ தொலைவில் இருந்து வரும் நீங்கள் இந்த ஊர்களில் இருக்கும் பகவானை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கட்டும். அதில் முக்கியமாக

1. தென்திருபுவனம்  இங்கு தான் கால் மாற்றி போட்டு அமர்ந்த நிலையில் இருக்கிறார் தட்சிணாமூர்த்தி.

2. திருப்புடைமருதூர்: நாறும்பூநாதர் திருக்கோவில்

3. மணிமூர்த்தீஸ்வரம் - உச்சிஷ்ட கணபதி ஆலயம்

4. முறப்பநாடு - இங்கிருந்து 3 கிமீதூரத்தில் தான் தென்திருநள்ளாறு என அழைக்கப்படும் நாணல்காடு.

5. சுத்தமல்லி - அழகிய ராஜராஜேஸ்வரி ஆலயமும் வேதபாடசாலையும்

இதர ஊர்கள் செல்வது உங்கள் சௌகர்யத்தை பொறுத்தது.

Sunday 19 August 2018

ரங்கா ரங்கா

”ரங்கா—ரங்கா—
*இவனை ஸ்தோத்தரிக்க , ஆதிசங்கரர் வந்தார்
*இவனை ஸ்தோத்தரிக்க ஸ்ரீ மத்வர் வந்தார்
*இவனுக்கு கைங்கர்யம் செய்த ஆசார்யர்கள்,கணக்கிலடங்காது.
ஸ்ரீரங்க வாஸம் செய்து, பற்பலக் கைங்கர்யங்கள் செய்த சில ஆசார்யர்கள்

*ஸ்ரீமன் நாதமுனிகள்,
*உய்யக்கொண்டார் ,
*மணக்கால் நம்பி,

*ஸ்ரீ ஆளவந்தார்,
*திருவரங்கப் பெருமாள் அரையர்
*பெரிய நம்பிகள்,
*எம்பெருமானார் என்கிற ஸ்ரீ உடையவர்
*முதலியாண்டான்
*கந்தாடையாண்டான்,
*கூரத்தாழ்வான்,

*திருக்குருகைப் பிரான் பிள்ளான்,
*எம்பார்,
*திருவரங்கத்தமுதனார்
*ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன்
*பட்டர்,
*நஞ்சீயர் ,
*நடாதூரம்மாள்
*பராங்குசதாஸர்

*பிள்ளை அமுதனார்,
*பிள்ளை உறங்காவில்லி தாஸர்
*பிள்ளை லோகாசார்யர்
*பெரியவாச்சான் பிள்ளை
*மாறனேரிநம்பி
*வங்கிபுரத்தாச்சி
*வடக்குத் திருவீதிப்பிள்ளை

*வடுக நம்பி
*நம்பிள்ளை,
*அநந்தாழ்வான்
*ஈச்வர முனிகள்
*எங்களாழ்வான்
*கூரநாராயண ஜீயர்
*சொட்டை நம்பிகள்
*திருக்கச்சிநம்பி

*திருக்கண்ணமங்கையாண்டான் ,
*திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,
*திருமாலையாண்டான்,
*திருவாய்மொழிப்பிள்ளை
*பின்பழகிய பெருமாள் ஜீயர்

*பெரிய ஆச்சான் பிள்ளை,
*அழகியமணவாளப் பெருமாள் ஜீயர் ,
*கூர குலோத்துங்க தாசர் ,
*திருவாய்மொழிப்பிள்ளை ,
*பெரிய ஜீயர் என்கிற ஸ்ரீ மணவாள மாமுனிகள்

இப்படி எண்ணிலா ஆசார்யர்கள் , இவனிடம் மோகித்து, பக்தி மேலிட்டு,
வாசிக, காயிக , லிகித கைங்கர்யங்கள் செய்துள்ளனர்

தியாகாஜ ஸ்வாமிகள், பஞ்சரத்னமே பாடி இருக்கிறார்
இவைகளை எல்லாம், கேட்டுப் பரவசமான ஜீவாத்மாக்கள் –சேதனர்கள் ,
”ரங்கா—ரங்கா—” என்று மெய்சிலிர்க்கக் கூவினர்; ஆடினர்;
ரங்கனின் புகழ் பாடினர்

ரங்கனை அடைய ஆவல் கொண்டனர் ; அவன் திருவடி நிழலில்
இளைப்பாரத் தாபப்பட்டனர்

பெரிய பெருமாள் , ஆதிசேஷனின் அரவணையில் , இவை அறிந்து ஆனந்தமடைந்தான்

நம்பெருமாளோ,
இருந்தும், கிடந்தும், நின்றும் –இங்கேயே பல்லாண்டாக நின்றும்–

அதன் பயனாக,
நம்பிள்ளைகளைத் திரும்பப் பெறுவோம் என்கிற ஆனந்தத்தில் ஸேவை சாதித்தான்

ஸ்ரீரங்கம்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்; நின்றான்

*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.

*தொண்டரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் பாசுரங்கள், பல இசைத்துப் பாட, பரவசப்பட்டான்; கிடந்தான்; நின்றான்

*மொத்தமாக 247 பாசுரங்களில், பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்

*இவன் சேர்த்தி ஸேவை தரும் ரங்கன்
*சித்ரா பௌர்ணமி அன்று, காவேரித் தாயாருடன் சேர்த்தி
*சித்திரையில், சேரகுல வல்லியுடன் சேர்த்தி
*பங்குனி ஆயில்யத்தில் , உறையூரில் கமலவல்லியுடன் சேர்த்தி,

*பங்குனி உத்ரத்தில் , பெரிய பிராட்டியாருடன் சேர்த்தி

*இவனே, காவேரி ரங்கன்
*இவனே கஸ்தூரி ரங்கன்
*இவனே பரிமள ரங்கன்
*இவனே க்ஷீராப்தி ரங்கன்
*இவனே இக்ஷ்வாகு குல ரங்கன்
*இவனே பெரியபெருமாள் ரங்கன்

*இவனே நம்பெருமாள் ரங்கன்
*இவன் கருமணி ரங்கன்
*இவன் கோமள ரங்கன்
*இவனே கோதையின் ரங்கன்
*இவனே வைபோக ரங்கன்
*இவனே முதன்முதலில், அரையர் ஸேவை கொண்டருளிய ரங்கன்

*இவனே தினமும், வெண்ணெய் அமுதுண்ணும் ரங்கன்
*இவனே ”திறம்பா ”வழிகாட்டும் ரங்கன்
*இவனே”கபா”அலங்கார ரங்கன்
*இவனே ”கோண வையாளி ”நடைபோடும் ரங்கன்
*இவனே ஐப்பசியில் , யாவும் தங்கமான ரங்கன்
*இவனே , தாயின் பரிவுடன் ”பல்லாண்டு” பாடப்பெற்ற ரங்கன்

*இவனே பங்குனியில் காவிரிக்கரையில், தயிர்சாதமும், மாவடுவும் விரும்பி ஏற்கும் ரங்கன்
*இவனே , அடியார்களை அரவணைக்கும் ரங்கன்
*இவனே வைணவத்தின் ”ஆணி வேரான ”அரங்கத்தின் அப்பன், ரங்கன்

*இவனே அடியார்க்கு ஆட்படுத்தும் ரங்கன்
*இவனே, தானே முக்தனாக இருந்து, வைகுண்ட ஏகாதசியன்று, பரமபதத்தைக் காட்டும் ரங்கன்
*இவனே பணியைப் பத்துகொத்தாக்கிப் பணிகொள்ளும் ரங்கன்

*இவனே இராமானுசரை, ”நெடுநாள் தேசாந்திரம் சென்று , மிகவும் மெலிந்தீரே” என்று தாயைவிட, அதிகப் பரிவு காட்டிய ரங்கன்

Saturday 9 June 2018

கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு,  ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. " என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!

🙏 பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

🙏ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

🙏முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

🙏தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

🙏அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

🙏கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்

🙏பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்

🙏கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்

🙏முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்

🙏உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்.

🙏கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

🙏சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்

🙏தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்!
🦌
படித்ததில் பிடித்தது. நாத்தீகத்திலிருந்து மீண்டு,  ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. " என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!

🙏 பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

🙏ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

🙏முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

🙏தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

🙏அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

🙏கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்

🙏பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்

🙏கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்

🙏முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்

🙏உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்.

🙏கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

🙏சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்

🙏தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்!
🦌
படித்ததில் பிடித்தது. நாத்தீகத்திலிருந்து மீண்டு,  ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. " என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!

🙏 பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

🙏ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

🙏முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

🙏தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

🙏அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

🙏கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்

🙏பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்

🙏கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்

🙏முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்

🙏உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்.

🙏கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

🙏சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்

🙏தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்!
🦌
படித்ததில் பிடித்தது.

Wednesday 6 June 2018

அச்சிறுப்பாக்கம் வச்ரகிரி மலை

🛣மேல்மருவத்தூர் -அச்சிறுப்பாக்கம்,

வச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா?
அனைவரும் வெட்கபடவேண்டிய துயரசெய்தி..
ஒவ்வொரு இந்துவும் தயவுசெய்து முழுமையாக படித்து பாருங்களேன்...

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்🛣 பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது.

இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு⛰ மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் ⛪ நிச்சயம் பார்த்திருப்பார்கள்.

மலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் அல்ல, உதிரமே கொட்டும். கீழே இருந்து அல்லது பேருந்தில் செல்லும்போது பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.

அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின்⛰ பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.

தரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது

ஆட்சீஸ்வரர் கோயில். இந்த ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.
வஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்' என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர்.

மலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க' என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது.

பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.

இப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர்.

எப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும்ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள்.

அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்?

ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்.
1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார்.

ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ' என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர்.

சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம்..
அனுமதியில்லாமல் யாரும் எதுவும் செய்யக்கூடாது.
என தடுத்தனர்.

சர்ச்சுக்கு மட்டும் எல்லா சலுகைகளையும் கொடுக்கிறீர்களே அதுமட்டும் சரியா என கேள்வி கேட்டதற்க்கு,

அவர்கள்  99 வருட குத்தகைக்கு இந்தமலை எடுத்துள்ளனர் என்றார்கள்.

அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.

அச்சிறுபாக்கம் கிராமத்து சூழல் மிகவும் அமைதியான கிராமிய மண்ணின் மனத்தோடு, வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது. கிராமத்தினுள் நுழையும்போது ஒரு விநாயகர் கோயிலும், அருகில் பெரிய குளக்கரையும் அதனையடுத்து பஜார் என்று சொல்லப்படும் கடைத்தெருவும் நம்மை வரவேற்கிறது. அதனை அடுத்து ஊருக்குள் நுழைந்தால் ஊரின் மையப்பகுதியில் அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான சிவன் கோயில் அமைந்துள்ளது.

அதுதான், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் அர்த்த மண்டபம். அதனை அடுத்து நேராக மூலவர், சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சோழர் காலத்து திருத்தலமாகும்.

அச்சிறுபாக்கம் என்பது பழங்காலத்தில் அச்சு இருபக்கம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது நமது சமய வழக்கப்படி எந்த காரியமானாலும் திருமணம் போன்ற சுப காரியங்களானாலும், தெய்வ காரியங்களானாலும் முழுமுதற் கடவுளான விநாயகரின் திருஉருவத்தை மஞ்சளில் பிடித்து பூஜை செய்த பிறகே ஆரம்பிப்பார்கள். அதனை உணர்த்தும் பாடல்களும் உண்டு, நெடுங்காலத்துக்கு முன்பு கிராமத்து மக்கள் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழாவின் போது விநாயகப் பெருமானை வழிபடாமல் தேர் இழுக்க முற்பட்டபோது தேரின் அச்சுமுறிந்து இருபக்கமும், தேரின் சக்கரங்கள் வீழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

அதனாலேயே
அந்த ஊரின் பெயர் அச்சு இருபக்கம் என்று வழங்கலாயிற்று. `அச்சு இருபக்கம்’ என்பதே காலப்போக்கில் அச்சிறுபாக்கம் என்று மாறிற்று என்று கூறப்படுகிறது.

அச்சிறுபாக்கம் மலை, கிராமத்தின் வலது புறத்தில் உள்ளது. இம்மலை தரையிலிருந்து சுமார் 700 அடி உயரம் கொண்டது. மலையில் பாறைகளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றால், முதலில் விநாயகரைத் தரிசித்து விட்டு மேலே சென்று பசுபதீஸ்வரரைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் உள்ள கோயிலில் உள்ள சிவாலயம் மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வர வஜ்ரகிரி வடிவேலர் ஆலயம் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகின்றது.

இம்மலை வஜ்ரகிரி என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் தோற்றத்தைப் பார்க்கும்போதே அக்கோயில் பல தாக்குதல்களையும், விஷமச் செயல்களையும் எதிர்கொண்டு நிற்பதை உணர முடியும்.

இக்கோயில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பதை, அதன் அமைப்பே நமக்கு உணர்த்துகிறது. சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முதன்முதலில் கோயில் ஸ்தாபிக்கப்பட்டபோது இருந்த சிவலிங்கம், விஷமிகளின் செயலால் மலைச்சரிவில் புதையுண்டு கிடப்பதை நாம் காணலாம்.

நெடுங்காலத்துக்குப் பிறகு 1960களில் மௌன சித்தராஜா என்பவர் இத்திருத்தலத்தைப் பராமரித்து வந்திருக்கிறார். கோயிலைப் புனரமைக்கும் முயற்சியில் மீண்டும் சிவலிங்கத்தையும், முருகனின் திருஉருவத்தையும் அமைத்தார். அவர் இருந்த காலத்தில் மக்கள் அங்கு சென்று பிரதோஷ காலங்களிலும், வாரத்தின் முக்கிய பூஜை நாட்களிலும் வழிபட்டு வந்துள்ளனர்.

மலைகள் சூழ்ந்த அடிவாரத்தில் ஒரு குளத்தை நிர்மாணித்து அதில் இரட்டை சுனைகளை சீரமைத்து கிணறுகள் அமைத்துள்ளார். பல மூலிகைச் செடிகொடிகளை கொண்ட வனாந்திரமான மலையின் பின் அடிவாரத்தில் சப்த கன்னிகளுக்கு கோயில் உள்ளது.
அச்சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான சீதாபுரம், பள்ளிபேட்டை, நேமம் ஆகிய பகுதிமக்களுக்கு பசுபதீஸ்வரர் கோயில் குலதெய்வக் கோயிலாகும். பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அச்சிறுபாக்கம் இந்துக்களின் கோரிக்கைகள் : -

* மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்ல, முன்னோர்களால் அமைக்கப்பட்ட பாதையை சீரமைக்க வேண்டும். இந்தப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் கிறிஸ்தவர்கள் கட்டியுள்ள அலங்கார நுழைவு வாயிலை அகற்றிவிட்டு பசுபதீஸ்வரருக்கு நுழைவு வாயில் கட்ட வேண்டும்.

* பசுபதீஸ்வரருக்குச் சொந்தமான வஜ்ரகிரி மலையை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

* வஜ்ரகிரி மலையில் உள்ள பாறைகளை உடைத்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

* இந்துக்களின் வழிபாட்டு முறையையே பின்பற்றச் செய்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும்.

* பசுபதீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளையும், மின்சார போர்டுகளையும் உடைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைக்கு வேலி!

* வஜ்ரகிரி மலையை நாங்கள் 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று பாதிரிகள் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். இதற்கு வனத்துறையினர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

வீட்டிற்கோ அல்லது வயல்வெளிகளுக்கோ வேலி அமைப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அச்சிறுபாக்கத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் கட்டியுள்ள மழைமலை மாதா என்ற சர்ச் உள்ள மலை முழுவதையும் ஏதோ தங்கள் குடும்ப சொத்துபோல வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த மலைக்கு கீழ்தான் வனத்துறை அலுவலகமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்கள் அனைவரும்  இதற்கு தீர்வு கிடைக்கும்வரையில் இச்செய்தியை பகிர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை..
ஒவ்வொரு இந்துமதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதையாவது செய்வீர்களா..???